உன்னாலே
யாரையும் பார்க்க மறுத்து திமிராக அலைந்த கால்களும் அசையாமல் போனது ...
நிதானமாக பேசும் உதடுகள் கூட நிலை தடுமாறி போக ,...
சற்றென்று தளும்பும் தண்ணீரை போன்று ,சற்றே தடுமாறுகிறேன் உன் பார்வையினாலே ....
தாங்கமுடியாத தனிமை கூட இனிமை தான் உன் கைகள் கோர்க்கும் பொழுது ....
சுற்றி இருக்கும் உதடுகள் பேசு வதை விட , பேசாத உன் உதடுகளையே என் கண்கள் கவனிக்கிறது ...
இதனை மாற்றங்களையும் ஏற்ற என் இதயம் ஏனோ ஏற்க ..மறுக்கிறது நீ என் அருகில் இல்லை என்பதை ....

