கொண்டாடுவதே காதல்
கண்ணசைத்தலும்
கைப்பிடித்தலும்
சீண்டலும்
கெஞ்சலும்
கொஞ்சலும்
மிஞ்சலும்
துஞ்சலும்
அள்ளலும்
கிள்ளலும்
நுகர்தலும்
வியர்த்தலும்
படபடத்தலும்
ஏங்கித்தவித்தலும்
காதலில் சேர்த்தி
காமத்திலும் சேர்த்தி
காமம் என்றதும் உடனே
புணர்தலை நினைக்காதீர்கள்
அது காமமல்ல,
காமத்தை தீர்க்கும் ஒரு உத்தியே
தீர்ப்பது காதலில்லை,
கொண்டாடுவதே காதல்.!
"காதல் என்றால் காமம் தானே" -
என்றதும் பதறாதிர்கள்
இனி ஆம்! எனச் சொல்லிக் கொண்டாடுங்கள்.
நீடூழி வாழ,
நீங்களும்
உங்கள் காதலும்...!

