நான் உன்னாலே பிரபலம்

நான் உன்னாலே பிரபலம்
நீ என் கவிதையின் பிறப்பிடம்
உன் பின்னால் சுற்ற பலர் இருக்க‌
என் பின்னால் சுற்றுபவளாய் நீ இருக்கிறாய்
உன் பின்னலினால் பின்னப்பட்டது என் இதயம்
உன் புன்சிரிப்பால் புதுப்பொலிவாகிறது என் மூச்சு
உன்னைப் பற்றியே வாய் பேசுகிறது பேச்சு
விட்டுவிட பிடிக்கவில்லை உன் கரத்தை
விட்டில் பூச்சியாகி ஒளியாகிய உன்னைத் தொட்டு தொட்டு
கருகி உருகி விடவே ஆசை
நீ காதலிக்க ஆரம்பித்த பின்பே
முறுக்கி விட ஆரம்பித்திருக்கிறேன் மீசை...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (26-Apr-16, 10:57 pm)
பார்வை : 955

மேலே