மனாளனே மணாளனாய்
அவன் நிழற் படத்தை,
நாட்கணக்கில் ரசித்ததுண்டு.
அவன் நினைவுகளில்,
பொழுதுகள் பல போனதுண்டு.
அவனை காண வேண்டி,
சருகாய் மனமும் காய்ந்ததுண்டு.
அவனை கண்ட மகிழ்ச்சியில்,
மாதக்கணக்கில் மிதந்ததுண்டு.
எல்லாவற்றின் பலனோ?
காதல் தவத்தின் விளை-வரமோ?
இன்று அவன்-
என் மனாளனே மணாளனாய்!

