காதல் என்பது - 5

காதல் எவ்வளவு வலிமையாய்
இருந்தாலும்

சற்றே சறுக்கல்
வருவது சகஜம் தான்

எந்த ரூபத்தில் வரும்
எப்படி வரும்
யாரும் அறியார்

காமனும் சற்றே
தன் கண்களை
திறந்தான்

இந்த ஜோடிகளைப்
பார்த்து
மெலிதாகப் புன்னகைத்தான்

ஒருவர் அனைப்பில் ஒருவர்

உணர்வுகளை எல்லாம்
அமைதிப்படுத்தி விட்டு

வேறு ஒரு உலகில்

லயித்துக்கொண்டிருந்த
வேளையில்

அந்த விஷமக்கார காமனும்
இவர்கள் பக்கம்
தன் கவனத்தை திருப்பினான்

ஆண்கள் அவசரக்கார்ர்கள்
காதலைப் பொருத்த மட்டில்

பெண் புத்தி பின் புத்தி
என்பது
தூய்மையான காதலில்
பொய்த்துப் போகும்

பெண் .....

ஆழ்ந்து யோசிப்பவள்

பின் விளைவுகளை
அச்சத்தோடு பார்ப்பவள்

அச்சம் வந்தாலே

அதற்கு எதிர்மறையான
தைரியம் தலை தூக்கும்

தம்மை மறந்து
காதல் உலகில்
பறக்கும் இவர்கள்

காமனின் போராட்டத்தை
எப்படி சமாளிக்கப்
போகிறார்கள்

தொடரும்.....

எழுதியவர் : ஆனந்த் சுப்ரமணியம் (29-Apr-16, 1:52 pm)
பார்வை : 185

மேலே