காதல் வரவில்லையா

கரைதொட முயன்று தினமும்
தோற்கும் அலைபோல் - காதலை
உன்னிடம் சொல்ல முயன்று
நான் தினமும் தோற்கின்றேன்

தோற்பதேல்லாம் தோல்வி அல்ல
உன் மனதை நான் ஜெய்க்க
மீண்டும் மீண்டும் நான் முயல்வேன்
காதலை தோற்கடிக்க .....

நேசமதை நீ மறக்க என்
காதல் வரவில்லையா
என்னை நீ மறுக்க
காரணம் தெரியலையா
மௌனம் உடையலையா ???

எழுதியவர் : ருத்ரன் (29-Apr-16, 7:43 pm)
பார்வை : 117

மேலே