மறுமணம் - பாடல்
மரணம் கண்ட இதயம் பின்னும் மாலை ஏற்க முடியுமா..?
முதல் தீண்டல் தந்த சுகம் எந்தன் நினைவை விட்டு நீங்குமா..?(பெ)
காதல் காயம் தந்த துன்பம் யானுமறிவேன் என் தோழி..!
உந்தன் பிம்பம் என்னுள் வைத்தேன் என்றும் உதறேன் என் தோழி..?(ஆ)
உந்தன் காயம் சுமக்கும் தெம்பும்
உனக்கும் இல்லை என் தோழி
உந்தன் காயம் யான் சுமப்பேன்
உற்றதொரு சேதி சொல்லு என்தோழிஆ)
உள்ளே உறுத்தும் உண்மை உணர்வை
எப்படி சொல்வேன் நான் உனக்கு
பெண்ணிவள் காண் பிரிதொரு ஆணை
ஏற்பதெப்படி சொல் நீ எனக்கு..?
வாழ்ந்த வாழ்வதுவும் வழிதோறும் தொடராதோ..?(பெ)
மரணம் கண்டவன் மீள்வதெப்படி
நீயிதை சொல்வாய் கண்மனி
அவன் பெயர் சொல்லி அல்லி உன்னை
நீயும் சிறைவைப்ப தேனடி..?(ஆ)
ஆயிரம் உறவுகள் இருக்கட்டும் பெண்ணே
உனக்கென ஒருவர் யாரிங்கு உண்டு(ஆ)
உன் இன்பம் உனதே
உன் துன்பம் உனதே
பகிரவும் வாய்ப்புதர தயங்குவதேனடி..?(ஆ)
நித்தம் ஒரு துன்பம்தாங்கி
நிலைகுலைந்த பெண்ணிவள்
சித்தம் அதுவும் இனி சுகம் தேடாது
சென்றிடுவீர் நீர்..(பெ)
நிறம் மாறும் உலகிது - நின்
நினைவுகள் மீட்க வகைசெய்வேன் கண்மனி
ஒருத்திக்கு ஒருவனென்றே முடங்குவதேனடி
ஒருவருக்கு ஒருவன் துணையொன்று வேண்டும்
பொல்லாத உலகிது தனித்துவாழ நினையும் விடுமோ..?(ஆ)
பொல்லாத உலகிது
உண்மைநீர் சொன்னீர்
ஊர் கண் அதுவும்
நமையும் ஏற்குமோ..?(பெ)
உன்னுள்ளம் எனை ஏற்ற பின்னும்
வேறெதுவும் ஒரு பொருட்டோ
பற்றதுவும் நீயே
பற்றிய கரம் நீங்கேன்..!(ஆ)
வெடிப்பு நிலத்தில் விழிநீர் பாய்ச்சி விளைச்சல் செய்ததும் ஏனய்யா..?
அன்பின் மொழியில் அன்பை சொல்லி உறவை தந்தாய் நீயய்யா..(பெ)