ஈர்ப்பு
அது உங்களை ஈர்க்கிறது.
யோசிக்க வைக்கிறது.
பகிரவும் பரிவு காட்டவும் வைக்கிறது.
உங்களின் அன்றாட சேயல்களின்
அலைவரிசையை மாற்றுகிறது.
ஒன்றுமில்லாத ஏதோ ஒன்றின்
ஆரம்பமாய் தொடங்கும் அது
ஒரு காகித மையின் ஈரம் காயும்
நொடிகளில் ஏற்படும் வேதியியல்
மாற்றங்களாய் உங்களில் ஊறிப்
போகிறது. இனமறியா வெக்கையையோ
வேட்கையையோ தூண்டுகிறது.
இறுதியில் சரியிலோ தவறிலோ
சென்று முடியும் அது உங்களுக்கு
எதையோ சொல்லித்தருகிறது...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
