அலட்சியம்

ஆடையை உதிர்த்துவிட்ட

மரமொன்றில் கூடு கட்டும் பறவையாய்

நிராசை கனவுகள்...

மேதகு முனிவர்களின் மௌனம்

கலைக்க வேண்டுதல் வைக்கும்

வேதனை சத்தம் மிகுந்த குமுறல்கள்

மூளை செல்களில்...

கோடையின் வெப்பம் தரித்த

ஜூவாலை நிறைந்த சூழல்கள்...

ஆளுக்கொரு நிறம் காட்டும்

சாலைகள்...

நிறங்களை தவிர மற்றதில் கலந்து

விடும் காற்றில் மிதக்கும் ரத்த

திட்டுகள்...

கேள்விகள் கேட்கும் மனங்களை

அடக்கும் அறிக்கைகள்..

தண்ட ஆயுதங்கள் ஏந்தும்

தரித்திரராய் நாடுகள்..

இப்பார் சூழ்ந்த சூழலில் போர்சூழல்...

அத்தனைஅவசரமாய் ஆயுதங்களின்

ஆயத்தப் பணிகள்...

உடமைக்கும் உரிமைக்கும்

இழுத்தடிப்பு செய்யும் இம்சைகளாய்

அகிம்சை கோட்பாடுகள்...

எழுதியவர் : வித்யா (30-Apr-16, 1:58 pm)
Tanglish : alatchiyam
பார்வை : 77

மேலே