குரங்கென துளமே-ஆசிரியப்பா

கள்ளம் கண்ணில் காட்டும் பெண்ணில்
உள்ளம் செல்லும் உண்மை சொல்வேன்
நெஞ்சில் துஞ்சும் நேரிழை வனப்பும்
கொஞ்சல் சொல்லதும் குளிர்தனை வழங்கும்
வெண்மை சங்கென விளங்கிடும் அணலும்
கண்மை தானதும் களிநடம் புரிந்திடும்
சுழலினில் சுழற்றிடும் சுடரவள்
குழலதின் வனப்பினில் குரங்கென துளமே!

-நேரிசை ஆசிரியப்பா

எழுதியவர் : (30-Apr-16, 2:01 pm)
பார்வை : 51

மேலே