உறக்கத்தில் உலரியவை

நிறம் மாறும் நிலையில்
அந்தி மாலை
இனி நிலவு வரும்
உன் கனவும் வரும்....

சூரிய பொழுதுகள் பரவாயில்லை
சந்திர பொழுதுகள்தான்
என்னை பாடாய் படுத்துகிறது....

தூங்கிவிட்டால் போதும்
என்பது என் கண்களின் நிலைமை
கனவாய் நீ வந்துவிட்டால்
கண்ணீர் துடைக்கவும்
உலர்வதை கேட்கவும்
தலையணை தயாராகி கொண்டுள்ளது....

கலை முதல் மலை வரை
பல நிமிடங்களில்
சில நிமிடங்களில்தான்
என்னை வதைக்கிறாய் ஆனால்
இரவானால் இரக்கமில்லாமல் கொள்ள துனிகிறாய்....

நேற்றிரவு தூங்க நினைத்ததை
இன்றிரவு நினைத்துகொள்ளும்
நாளை இரவு தூங்கலாம்.....

தனிமையில் என் உறகத்தின் தேடல்
விடியும் வரை கூட தொடரலாம்....

என் உயிரில் கலந்தவள்தான் நீ
உறக்கத்தை கலைத்தவலும் நீதான்....

மலர் படுக்கையோ
முள் படுக்கையோ
உடலுக்கு தெரியவில்லை
மனம் மட்டும் வலியால் துடிக்கிறது,,,,

போதும் பெண்ணே
இன்றிரவாவது தூங்க விடு
நாளையும் விழித்தெழ வேண்டும்
உன்னை நினைத்துக்கொண்டே.....

எழுதியவர் : பாலமுதன் ஆ (20-Jun-11, 12:15 pm)
சேர்த்தது : பாலமுதன் ஆ
பார்வை : 360

மேலே