பழைய குருடி

பழைய குருடி கதவைத் திறடி
என்ற நிலைதான் மறுபடியும்.

ஆணும் பெண்ணும் சமமாம்
சிறிய பெரிய போராட்டங்கள்.

காதலில் மட்டும் எப்பொழுதும்
காதலனே காதலிக்கு
அடிமையாய் கிடப்பதேன்.

புரிவதில்லை புரிந்துகொள்ளமுடிவதுமில்லை.
வருந்தி, ஆகப்போவதுவும் ஒன்றுமில்லை.

விழுந்தால் மரணம்தான் என்பது
முழுமையாய் உணர்ந்தும்
பாதாளத்தையே பார்த்துக் கிடக்கின்றோம்.

மறுபடி மறுபடி வீழ்ந்து
மரணித்துக்கொண்டே.

ஜென்ம ஜென்மமாய், விடிவெப்போது
என்பது புரிந்துகொள்ளப்பட முடியாமலே!

எழுதியவர் : jujuma (20-Jun-11, 12:29 pm)
சேர்த்தது : nellaiyappan
பார்வை : 367

மேலே