ரணம்

அழாதே தம்பி
அன்னை வருவாள்
அன்பு மழை பொழிய....

அழாதே தம்பி
அன்னை வருவாள்
அள்ளி அணைக்க....

அழாதே தம்பி
அன்னை வருவாள்
அன்னம் அளிக்க...

அழாதே தம்பி
அன்னை வருவாள்
ஆடையால் அலங்கரிக்க..

அழாதே தம்பி
அன்னை வருவாள்..
ஆராரோ பாட..

அழாதே தம்பி
அன்னை வருவாள்..
நம் வாழ்வு மலர...

எழுதியவர் : (1-May-16, 11:23 am)
Tanglish : ranam
பார்வை : 1037

மேலே