உழைப்பவனுக்கு ஏது ஓய்வு
உழைப்பவனுக்கு ஒவ்வொரு நாளும் கூலி தினம்
உழைப்பினால் உண்டு வயிற்று பசியாறு தினம்
உழைக்கவில்லை என்றால் அன்று வயிறு காலி தினம்
உழைப்பவன் பெயர் சொல்லி மற்றவர் கொண்டாடும் தினம்
வெறும் சமூகப் போலித் தனம்
உழைப்பவன் நம்பியிருப்பது தன் உருகுக் கரம்
வியர்வை சிந்தும் அவனுக்கில்லை ஓர் ஓய்வுதினம் !
----அன்புடன், கவின் சாரலன்
எனது மே தினக் கேள்வியில் கே விக்னேஷின் கருத்தினில் சொன்னது