மாலினி 22 பாளையங்கோட்டை

பாரினிலே
பருவவயதினிலே
அமுதமாய்
கதைத்திட்டே
மயக்கிடுவான்
ஆறுதல் மொழியுரைத்து
அன்பாய் பேசி
தோளில் சாய்ந்து கொள்
என்பான்
துக்கம்
தாங்காமல்
தூக்கம்
இல்லாமல்
தவித்திடும்
பொழுதினில்
மடியினில்
படுத்துக்கொள் என்பான்
அழுகையில்
விம்மிட
அவனே வந்து
அணைத்தே
ஆசுவாசம் செய்வான்
நடிகையின் பெயரை
அழகியின் பெயரை
உன் பெயராக்கி
அழைத்திடுவான்
நீயும்
அதை நம்பி சிரித்திடுவாய்
பெண்ணே
கண்ணே
முன்னே
சுதாரித்துக்கொள்
ஆசை வார்த்தையில்
விழுந்துவிடாதே
அவன் வலையில் போய்
மாட்டிக்கொள்ளாதே
அவன் எனும்
வெறி நாய்
குழந்தையையும்
குமரியையும்
கிழவியையும்
விட்டு வைக்காத வெறியனன்றோ
அவனுக்கு அன்னை
தங்கை மகள்
எல்லாம் இருந்தால்
என்ன கதி நேரும்
ஆண்மகன் எனும்
தகுதியில்லா நிலை
தண்டனையாய்
தரவேண்டும்
அந்த கொடும்பாவிக்கு
பெற்றவர்களே
பெரியவர்களே
குழந்தைகளை பாதுகாப்பது நம் கடமை
நல்லது தீயது நாம் சொல்லித்தருவோம்
குழந்தைகளுக்கு
வரும் காலம்
பொற்காலம்
படைக்கட்டும்
~ பிரபாவதி வீரமுத்து
பெற்றோர்களே
பெண் பிள்ளைகளை
பேணிகாத்து
தொடுதல் மொழிகளை
வயதை கருத்தில் கொண்டு சொல்லுங்கள்.
பேருந்தில் தினமும் பெண்கள் படும் துயரம்
இன்றைக்கும் எங்கேயோ ஒரு மூலையில் அரங்கேறிக்
கொண்டிருக்கலாம்.
தற்காப்பு கலையை கற்றுத்தாருங்கள்.
சரியான வழிகாட்டுதலில்
உங்கள் கண்பார்வையில் பார்த்துக்
கொள்ளுங்கள்
ஆனால் ஒன்றை நியாபகம் வைத்துக் கொள்ளுங்கள்
அவர்களின்
சுதந்திரத்தில் எந்த ஒரு கீரலும் விழாமல் பார்த்துக் கொள்வது.
ஆண்பிள்ளையை
பெற்ற பெற்றோர்களே
தங்கள் பிள்ளை
நாளை பெண்ணை
பார்க்கும் பார்வையை
நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்
உங்கள் பார்வை நன்றாக
இருக்கும் பட்சத்தில்
குழந்தைகளை
முறையாய் வளர்போம்
பாதுகாப்போம்
யதார்த்த அறிவை தருவோம்
தீமைகளை களையெடுப்போம்
வேரறுப்போம்
சிறுவயதில்
என்ன விதைக்கிறோமோ
அதுவே
நாளை மரமாகிறது
ஆதலால் பார்த்து
பார்த்து
மனதை உழவுசெய்யுங்கள்
நாளை
நல்ல விளைச்சல்
தருவது நிதர்சனம்
~ பிரபாவதி வீரமுத்து