வாழ்வு கொடுத்தவர்கள்

மிகச்சிறந்ததும் தத்ரூபமானதுமான
புகைப்படமொன்றுக்காய்
உயரிய விருதையும்
பொன்முடியும் பெற்று ஞாபகார்த்த
பொன்னாடை போர்த்தப்பட்ட கௌரவத்தின்
மகிழ்ச்சியில் திளைத்திருந்தவனால்
எடுக்கப்பட்ட படத்தில் சுற்றுலாத் தள
நீர்நிலை ஒன்றில் காலிடறி
விழுந்துவிட்டிருதவனைப் பார்த்துப்
பதைத்தவர்கள் செய்வதறியாது
கூக்குரலிட்டும் ஆராவாரம் செய்தும்
காப்பாற்றி விட்டிருந்தார்கள்.
பலநாள் பட்டினியால்
மரணிக்குகும் தறுவாயிலிருந்த
முதலையின் வாழ்வை.
*மெய்யன் நடராஜ்