நீர் இன்றி அமையாது உலகு
உழைப்பாளி.... உன்னதமான வார்த்தை!
நீரே கண் கண்ட கடவுள்...
ஆம்..
நீரே கண் கண்ட கடவுள்...
உழைத்து களைத்தவனுக்கு அவன்
உயிர் மூச்சை புதுபிக்க
தண்ணீர் தேடும் உதடுகள்!
தண்ணீர் பந்தல்கள் எல்லாம்
வெற்று பானை பந்தல்கள்!
குடிநீர் குடங்கள் எல்லாம்
குழாய் அடியில் கிடக்கும் தவமுணிகள்!
குடிநீர் குழாய்கள் எல்லாம்
காற்றடிக்கும் காற்றலைகள்!
ஆற்றுத் தண்ணீரை அயலவருக்கு
அள்ளி கொடுக்கும் திருடர்கள்..
தாகத்திற்கு தண்ணீர் கேட்டவனுக்கு
தரும் அன்பு பரிசு.. கண்ணீர்!
தோழா! உன் கண்ணீர் துடைக்க
ஒரு லிட்டர் தண்ணீர்...
வெறும் ஐம்பது ருபாய் தான்...
உழைப்பவன் இருக்கும் வரை
உலகின் ஆயுள் குறைவதில்லை!
தண்ணீர் தட்டுப்பாடு இருக்கும் வரை
உழைப்பவனுக்கு ஆயுள் இல்லை!
"நீர்" இன்றி அமையாது உலகு..
ஆம்... "நீரும்" இன்றி அமையாது உலகு...