ஓடுகிற தண்ணியிலே

ஓடுகிற தண்ணியிலே ஓடமது கொஞ்சியதே
ஆடுகிற வெள்ளலையோ ஆனவரை அள்ளியதே !
தேடுகிற தென்றலிலே தேனருவி சிந்தியதே
காடுகரை வந்ததுமே கானமழை பொங்கியதே !

வாடுகிற பெண்ணழகே வானமது கொட்டியதே
பாடுகிற பட்சிகளோ பாவைமொழி சொல்லியதே
ஈடுயிணை ஒன்றிலையே ஈரவிழி சொல்லிடுதே
வீடுவரை வந்தவளே வேறுகதி இங்கிலையே !

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (5-May-16, 12:30 am)
பார்வை : 68

மேலே