குழந்தை தொழிலாளர் --போட்டிக் கவிதை--முஹம்மத் ஸர்பான்

பள்ளியறையின் முகவரி தொலைந்த வாழ்க்கை
கள்ளிச் செடியின் வேர்கள் வாழும் கரசமேட்டை போல
பழுத்தப்பட்ட கைரேகைகளில் கனவுகளின் வாசகம்
பாழடைந்த கோட்டை காக்கும் சிலந்தி வலைகள் போல

பென்சிலின் விரலில் சாப்பாத்து தைய்க்கும் ஊசிகள்
தண்ணீரிருந்து கானல் நீரில் தாகம் தீர்ப்பதை போல
உளையின் வெப்பத்தில் கொப்பளிக்கும் காயங்கள்
சின்னப்பூக்களும் தென்றலால் கற்பழிக்கப்படுதல் போல

களியினால் செய்த பொய்க்கால் குதிரையின் அறியாத்தனம்
ஆயுதம் தாக்கிய சிறார்களின் பிஞ்சு மழலை போல
சாக்கடை குழியிலும் திறமையுள்ள வைத்தியன் காண்கிறேன்
பூத்த பூக்களை ரசிக்கையில் உதிர்ந்த பூக்கள் தெரியாததை போல

பட்டாசுதொழிற்சாலையில் காரியம் சிறார்களின் இமைகள்
வியர்வை படிந்த தேகத்தில் உப்புக்கள் படிதல் போல
கண்கள் தோண்டப்பட்ட அட்சய பாத்திரத்தில் கவிஞர்களின் கண்கள்
சிங்கம் போல் உறுமும் மொழியிருந்தும் புல் உண்ணும் விதியை போல

இரு அந்தரங்க மறைவில் செய்த காமத்தின் பிழைகள்
அனாதை இல்லத்தின் பரப்பிலும் நிரம்பாத அன்பினை போல
அஞ்சல் ஓட்ட வீரனும் முடமாக்கப்பட்டு கற்கள் சுமக்கிறான்
வெறி பிடித்த விஷமியின் உமிழில் ஆயுள் முடங்குதல் போல

பட்டாம்பூச்சிக்கு கூட இங்கே பாதுகாப்பான சோலைகள் உண்டு
அதனை பிடித்து விளையாட பிள்ளைக்குத்தான் கைகள் இல்லை
ஐயறிவு நாய்க்கு கூட உலக அமைப்புக்கள் உரிமைகள் தொடுக்கிறது
ஆனால் முகவரியற்ற குழந்தைக்குத்தான் அடிமை எனும் மரணம் தண்டனை

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (5-May-16, 5:41 am)
பார்வை : 205

மேலே