அம்மாவிற்கு ஓர் கவிதை

தாய்க்கு ஒரு கவிதை

அம்மா அகிலம் போற்றும்
அழகிய சொல்
அமைதி காற்றும்
அழைக்கும் சொல்
அன்பைக் காட்டி
அரவணைத்த தாய்
அகிலம் காட்டி
அறிவு கொடுத்தாய்
அன்புள்ள.
அன்னையே - உன்னை
அழகிய. வரிகளில்
அலங்காரம செய்திட
அலைந்து திரிந்தேன்
அன்னை எனும்
அழகிய வாரத்தைக்கண்டு
அகிலத்தில் வேறு கவியில்லை என
அறிந்தேன்
ஆம்,
ஆசையாசையாய் ஈன்றெடுத்து
ஆசி கொடுத்த
ஆண்டவனுக்கு
ஆரவார பூஜை தொடுத்து
ஆசைக்கனவுகளோடு
ஆளாக்கி வளர்த்தாயே
இறைவன் இருப்பதை - உன்
இன்முகத்தில் கண்டேன்
இன்றளவும் - என்
இதயத்தில்
இன்றியமையாத
இனிய தாயாய் இருக்கும் - என் தாயே
உயிர் கொடுத்து
உயிரில் மெய் தொடுத்து
உலகம் அறிய செய்தாய்
ஊழ்வினைகள் வந்தும்
ஊக்கமளித்து
ஊர் போற்ற வழி செய்தாய்
ஏணிப்படியாய் இருந்து - என்னை
ஏற்றமடைய செய்தாய்
ஏழு அதிசயங்களும் வியந்தன
நம்மை விட அதிசயம் ஒன்று
அது,
அன்னை தான் என்று
ஒன்றில்லாமல் இரண்டில்லை
அன்னையில்லாமல்
இவ்வுலகில்லை

ஒன்றிரண்டு வார்த்தையில்
கவி பாடியிருப்பேன அன்னையே
எழுத எழுத தொடர்ந்ததே தவிர
முடியவில்லை
உமக்கு என்றும் முடிவில்லை என் தாயே.
உங்கள் தோழன்
கவிபிரவீன்குமார்

எழுதியவர் : கவிபிரவீன்குமார் (5-May-16, 8:18 am)
பார்வை : 88

மேலே