உண்மையை சொல்லட்டும்....!
அதோ என் தாயின் சடலம் அங்கே தூக்கி எறியப்படுகிறது.
என் தந்தையின் சதைத் துண்டுகள் இங்கே சிதறி கிடக்கின்றன.
என் தங்கையின் உடைகள் கிழித்து தரையில் வீசப்பட்டுள்ளது.
எங்கள் வீட்டு மழலையின் அழுகைக் குரல் அங்கே எதிரொலிக்கிறது.
இங்கு வீசும் காற்றில்,
எங்களின் மரண ஓலம் உங்கள் காதை நிரப்பட்டும்.
எங்களின் பாவப்பட்ட கண்ணீர் உங்கள் மனசாட்சியை உலுக்கட்டும்.
எம் மண்ணில் உறைந்த இரத்தம்,
உங்களுக்கு உண்மையை சொல்லட்டும்....!