மதுக்கடை
பாருக்குள்ளே நல்ல நாடு பாரதநாடு என
ஊருக்குள்ளே சொன்ன பாரதியைத் தேடு !
பார்கள்(BAR) பல உள்ள நாடு தமிழ்நாடு என
பாருங்கள் இந்த வெட்க்க கேடு !
போரடித்து வாழ்ந்த மூத்தகுடி என்ற பெருமைப் போச்சு
பீரடித்து வாழும் குடி என்றநிலை எவரால் உருவாச்சு !
பத்து குரளில் கள்ளுண்ணாமை சொன்னது குரளதிகாரம்
ஒற்றை இரவில் பத்து மதுக்கடை திறப்பது அரசதிகாரம் !
பெயர்க்கெடும் என அஞ்சி புகையிலை பாக்கிற்கு தடையாம்
உயிர்க்கெடும் என அறிந்தும் ஏன் இத்துணை மதுக்கடையாம் ?
பாதைமாறி போகும் பிள்ளைகள் என்றும் பாராமல்
போதையேற்றி பெறுவதென்ன வருமானமா அவமானமா ?
பள்ளிகள் திறந்து மூளையை வளர்த்த அரசு இன்று
பாட்டிலை திறந்து நுரையீரல் பறிப்பது ஞாயமா ?
போகும் நிலையை பாரு பூந்தோட்டமாய் இருந்த நாடு
சாகும் நிலை சீக்கிரம் வந்து ஆகும் ஓர்நாள் சுடுகாடு