அரசியல் நேற்றும் இன்றும்
தாய்க்கு சேலை வாங்கி தந்தேன் நான்
அதை ஊருக்கு சொல்லி பெருமை கொள்வதா
என் மக்களும் என் தாய் போல
விளம்பரங்கள் தேவையா
நான் செய்ததை சொல்லி காட்ட
அவர்தம் வரி பணத்தை
விளம்பரத்திற்கு செலவளிப்பதா
-மக்களின் முதல்வர் காமராஜர் சொன்னது
செய்வோம் நாம் ஒன்றிரெண்டு
விளம்பரமோ நூற்றிரெண்டு
ஆள்பவரும் ஆள துடிப்பவரும்
ஒத்துப்போகும் ஒன்றிரெண்டில்
இதுவும் ஒன்று....!!!
-குடிமகன் எவனோ போதையில் சொன்னது