1110 PM
சாலையோரம் நின்றிருந்த
கடைசித் திருநங்கை அவள்...
அலைபேச ஓரங்கட்டி
நிறுத்திய என்னருகே மெல்ல
வந்தாள்....
எனை உற்று நோக்கினாள்...
அவள் கண்கள் கலங்கி
இருந்தன...
சில நொடி பார்வைக்குப் பின்
"எனக்கு மூஞ்சிதான் சரியில்ல"
என்றவள் பாதியிலேயே
நிறுத்தி விசுக்கென
அழுதுகொண்டே
வேக வேகமாய் நடக்கத்
துவங்கினாள்...
அலைபேசியும் பேசாமலும்
ஓரளவுக்கு புரிந்தவனாக
அவள் போவதை பார்த்தபடியே
அமர்ந்திருந்தேன்...
பின்,
சட்டென முடிவெடுத்தவனாக
வேகமாய்
அவள் பின்னே சென்று
அவளருகே வண்டியை நிறுத்தினேன்...
'என்ன' என்பது போல திரும்பிப்
பார்த்தாள்...
11 மணி நிசப்தத்தில்
பட்டென அவளை இழுத்தணைத்து
இதழோடு இதழ் பதித்து விட்டு
கையிலிருந்த 250 ரூபாயை
அவள் கையில் திணித்தபடியே
வேகமாய் நகர்ந்து சாலையில்
புள்ளியாகி மறைந்து போனேன்...
அவள் இன்னும் சற்று நேரத்தில்
வயிறார சாப்பிட்டு விடுவாள் என
நம்பத் துவங்கியிருந்தது
11.10 PM
கவிஜி