கனவு தாய்
வளர்ந்து கெட்டவனே
எங்கடா போற
உரக்க கத்தி கூப்பாடு போடுகிறாள்
தாய் ஒருத்தி
அவனது உருவமும்
நிமிர்ந்து நோக்கும் அளவே உள்ளது
என் கரம் பற்றி
அழைத்து போடா
என்று அன்பாய் கேட்கிறாள்
தன் சுருங்கி போன தோல் கையால்
மெல்ல தன் கையை
பின்னே இழுக்கிறான்
கரம் பார்த்து
நடுங்கி போகிறான்
தன்னை வளர்த்த
கரங்களை பார்த்து
கதறி அழுகிறான்
கண் பார்வை வந்த பின் !