குழந்தை தொழிலாளர்

எந்த ஒரு துறையிலும்
நாங்கள் கால்பதிக்கவில்லை
ஒவ்வொரு உடையிலும்
எங்கள் கைரேகை பதிகிறது

சாலையோரம்
எங்கள் கனவுகள் மிதிபடும்
தெருவோரக் குப்பையோடு
அவைகள் அள்ளப்படும்...

எங்களை செங்கல்சூளை மாற்றவில்லை
எங்கள் சூழ்நிலைதான் மாற்றியது

எங்களின் படிப்பு
பாரமாய் ஆகவில்லை
வியாபாரமாய் ஆனது

பணத்தின் வாடையை அறிந்துகொள்ள
வாழ்க்கை பாடத்தை புரிந்து கொண்டோம்

வறுமையை ஒழிக்க
தீக்குச்சிகள் எண்ணினோம்
சாம்பல் ஆனதோ
எங்கள் உடல் மட்டுமே...

எங்களை தரம் பிரிக்கும் தரகர்ளே!
தரம் பார்க்கும் தனவான்களே!
குழந்தைத் தொழிலாளிகள்
இருக்கும் வரை
குற்றவாளியாய் கூண்டில் நிற்பீர்

இறுதியாய் ஒரு கேள்வி-எங்கள்
அதிகாலையை அஸ்தமனம் ஆக்கியோரே
நாங்கள் விடியல் காண்பது எப்போது??

எழுதியவர் : வீ. சீதளாதேவி (10-May-16, 5:47 pm)
பார்வை : 84

மேலே