======மழை கால விசும்பல்=====

கதிரொளி தேடிக்கொண்டே தலைசாய
மஞ்சள் கொஞ்சும்...காந்திப் பூ...
அல்லிக்கும் இரவில் இனி - பனி
படர்த்தும் நிலவொன்றே தேவை..அவள்
மையல் விழிக்கு அஞ்சனமும் வேண்டாம்
அவன் நிழலருகில் தஞ்சம் போதும்

கார் பொழியும் மார்கழியில்
காதல் தெருக்களெல்லாம்
தேரேறி அலைகிறாள்
ஏதேன் தோட்டத்தின் தேவதை
ஏதேதோ எண்ணத்தில் தாரகை

துளி விழையில் திவலைகளில்
துயரமுகம் தோய்ந்து போய்
கழுவிச் சிரிக்கப் பார்க்கிறாள்
காதலன் வரும் பாதை தேடியவள்

மெல்லிசை ரீங்காரம் பொன்னிகள்
பூக்களில்.....மின் மினி ஜாடையில்
கன்னித் தேன் ..உமிழ்க்குது
என்னவெல்லாம் செய்திடும்
காலத்தின் சிதறலில் தேம்பித்தான்
தொலைகிறாள் ...
தாகப் பூ தேகத்தின் தேவையை
விழிகளால் முகிழ்கிறாள்....

போனவன் புறப் படும் சேதியில்லை
இவள் பொன்னெழில் குறைவதாய்
தோன்றவில்லை...
மாதங்கள் ஆகியும் தேதிகள்
போகுதில்லை..
அவனில்லா ஊரில் உடல் இருந்தும்
இவள் பாதியில்லை..

கண்ணிரண்டும் சுண்டுகிற கண்ணீர
கைச்சிறையில் முகமேந்தித் தடவி விட
நேசமே ஆனவன் அருகில் இல்ல
நெஞ்சு இங்கு வாடுவது என்ன சொல்ல

வெள்ளிக்குள் விடியட்டும் ராத்திரி....
அவள் புல்லியில் ஏற்றினாள் பூத்திரி
காக்திருப்பின் கதவுகளை சாத்திடவே
காதல் சாமந்தி முகை நனைந்து பூத்திடவே
ஒரு சம்மதம் சொல்லத் தான் வருவானோ
இவள் ஜாடையில் பரிசள்ளித் தருவானோ..

எழுதியவர் : -முன் பனி- (12-May-16, 12:34 pm)
பார்வை : 113

மேலே