வேதனை நிறைந்த வாழ்க்கை
வேறிடம் போக எனக்கு
கல்வியோ துளியும் இல்லை
வயலிடம் வாழ்க்கைப் பட்டேன்
வேதனை சொந்தம் ஆச்சு
மானிடப் பிறவி நானே
பசியினால் துடிக்கும் வேளை
எந்நிலப் பயிர்கள் எல்லாம்
நீரின்றி தவிப்பதைக் காண்
உலகத்தார் பசியைப் போக்க
செய்கிறேன் இந்தப் பணியே
பசியெனக்கு பழகிப் போச்சு
பாதிசொந்தம் விலகிப் போச்சு
மாட்டுக்குப் புல்லும் இல்லை
ஆட்டுக்கு இலையும் இல்லை
பயிருக்கு விலையும் இல்லை
வாழ்க்கையில் ஒளியும் இல்லை
பட்டினி கூட வருது
பிரச்சனை கழுத்தை பிடிக்குது
நாளையோ பயத்தைக் கொடுக்குது
வேதனை மட்டுமே நிலைக்குது