அடித்தட்டின் மேலே மேல்தட்டு

அடித்தட்டின் மேலே மேல்தட்டு
அடித்தட்டு அசைந்தால் மேல்தட்டு விழுந்துவிடும்
ஆனால் மேல்தட்டோ
அசையவே விடாது அடித்தட்டை
அசைய முயற்சித்து முயற்சித்து
அடிமைப் பட்டே கிடக்கிறது அடித்தட்டு
அதனை அழுத்தி அழுத்தி
ஆனந்தமாய் உடல் பெருத்துக்கிடக்கிறது மேல்தட்டு

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (12-May-16, 8:06 pm)
பார்வை : 218

மேலே