வானமே எல்லை

தொட்டுவிடும் தூரம் மிகக்குறைவே
அதை தொடநினைக்கும் நெஞ்சுறுதி மிகநிறைவே
எட்டிவிடும் கனிகள் மிகச்சுவையே
அதை பறிக்கநினைக்கும் கைகள் மிகபலமே
தட்டிவிடும் தளர்ச்சி உதறித்தள்ளு
அதை உற்சாக கோடாரியால் வெட்டித்தள்ளு
பட்டுவிடும் கண்ணீர் மிகவிரைவே
அதை காணாமல் ஆக்கிடுமே வெற்றிப்புறாவே

லட்சிய வானத்தின் நீலம்நாமே
அதை அளக்க நம்கைகள் நீளம்தானே
அலட்சிய தோல்வியை அவமதிப்போம்
அதை நம்மை அடக்கிட அனுமதியோம்
வானத்தை எல்லையாக்கி வெற்றிசூடுவோம்
அதை தணியாத குறிக்கோளாய் வகுத்துக்கொள்வோம்
வானம்கூட நம்முன்னே மிகவும்சிறிதே
அதை ஜெயித்துவிடு நாமெடுக்கும் முயற்சிபெரிதே....

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (12-May-16, 8:04 pm)
பார்வை : 3033

மேலே