உயிரே நீ சிகரமாயிரு

"நினைவலைகள் கடந்து விட்டால்
கற்பனைகள் ஓடிவிடும்
கனவலைகள் நடந்து விட்டால்
காட்சிகள் தடுமாறிவிடும்
ஓடும் நதி பாய்ந்து விட்டால்
வாழ்க்கை தடம் புரண்டு விடும்
பாயும் நதி ஓய்ந்து விட்டால்
கல்லணைகள் காய்ந்து விடும்
பாசவளைக்குள் பற்றிடவே
மனவலைகள் ஓடிவரும்
மனவலைகள் புகுந்து விட்டால்
பேரலைகள் பற்றை இழந்து விடும்
சுவாச அலைகள் நின்றுவிட்டால்
துடிப்பலைகள் சென்று விடும்
உயிரே நீ சென்று விட்டால்
உறக்கமே நிரந்தரமாகும்!"

எழுதியவர் : சு.சிவசங்கரி (4-Jul-24, 8:16 pm)
சேர்த்தது : சு சிவசங்கரி
பார்வை : 61

மேலே