இருள்
பயமுறுத்தும் குழந்தைகளை
குஷிப்படுத்தும் திருடர்களை
மனதிலிருக்கும் தீயோரிடம்
அசைபோடவைக்கும் முதியோர்களை
நிலவுவர விலகிவிடும்
சூரியன்கண்திறக்க தன்விழிமூடும்
மின்சாரமில்லா ஊரில் குடியிருக்குமிது
தமிழகத்தை ஏனோ குத்தகைக்கு எடுத்திருக்கிறது
ஒளியின் எதிரி
வெளிச்சத்தின் வில்லன்
பகலின் முடிவுரை
இரவின் முகப்புரை
இதனை விலக்க விலக்க
வாழ்வில் ஏற்றம் நமக்கே
இதனை துரத்த துரத்த
விலகும் ஏமாற்றம் தூரமே