குழந்தைச் செல்வங்கள்

குழந்தைகள்
இருக்கும் வீடு கலகலப்பாக இருக்கும்..
ஒன்று குழந்தைகள் கத்திக்கொண்டு இருப்பார்கள்
இல்லை வீட்டில் இருக்கும் பெரியவர்கள்
"கத்தாதே கத்தாதே" என்று கத்திக்கொண்டு இருப்பார்கள்

குழந்தைகள்
ஒவ்வொரு வீட்டின் கொடைகள்
இவர்களை பட்டை தீட்டி வைரங்களாக்குவதும்
கண்டிக்காகமல் அவர்கள் போக்கில்விட்டு பின் வருத்தப்படுவதும்
பெரியவர்களில் கைகளில் தான் உள்ளது...

குழந்தைகள்
பேசுவதையும் சிரிப்பதையும் பார்த்துக் கொண்டிருந்தாலே போதுமானது
மனம் நிறைவடையும் மகிழ்ச்சி பொங்கும்
இருக்கும் வருத்தங்கள் கண்ணுக்கு தெரியாத பூச்சியாய் பறந்துபோகும்
கோடையில் தென்றல்.... குளிரில் கதகதப்பு இவர்கள்...

குழந்தைகள்
அவர்களின் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
எந்த வருத்தமின்றியும், பயமின்றியும், எந்த துன்பமின்றியும்
நாளை என்ன எப்படி எங்கு என்று சிந்திக்காமல்
சந்தோசமாய் வாழுமவர்களை வாழவிடுங்கள்

குழந்தைகள்
உற்சாக அருவிகள்... பாடித்திரியும் குருவிகள்...
நம் வாழ்வை வளமாக்க வந்த கருவிகள்...
அவர்களோடு மகிழ்வாய் கழிக்கும் தருணங்களே நாம் வாழும் காலங்கள்
மீதி நேரங்களில் வாழ்க்கை நம்மோடு மல்லுக்கட்டி கொண்டே இருக்கும்

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (12-May-16, 7:51 pm)
பார்வை : 4076

மேலே