குடி குடியைக் கெடுக்கும்

லுங்கி விழுவது தெரியாமல் ரோட்டில் நடப்பதும்
கண்ணுமண்ணு தெரியாமல் பொஞ்சாதியை அடிப்பதும்
வாய்க்கு வந்த படியெல்லாம் எல்லோரையும் ஏசுவதும்
வாய் உளர நடை தள்ளாட‌
இரண்டு நாளைக்கு ஒருமுறை சாக்கடையில் விழுந்துகிடப்பதும்
வீட்டு வேலை செய்து நாலு காசு சம்பாதித்து
பருப்பு டப்பாவில் ஒளிய வைத்திருக்கும் வடிவின் பணத்தை
தினம் திருடி குடிப்பதும்
தன் தினசரி வழக்கமாக கொண்டிருந்த பொன்ராசு..
இப்போதெல்லாம் குடிப்பதை விட்டுவிட்டானாம்..
அவன் அதிகம் பாசம் வைத்திருந்த அவன் மகன் மகேசு
சந்து மறைவில் குடித்ததை
ஊரே பார்த்து இப்படி சொன்னதில் இருந்து
"அப்பனுக்கு புள்ள தப்பாம பொறந்திருக்கான்"

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (12-May-16, 8:17 pm)
பார்வை : 3628

மேலே