காகிதம்

எழுத்தால் நிரப்பப்பட நூலாகுது
இருக்கும் இடம்பொறுத்து நிறம்மாறுது
காலையில் செய்தித்தாளாய் தினம்பிறக்குது
அழுக்காய் பழைய தாளாக தீக்குளிக்குது
வடையும் நட்பாக எண்ணையாகுது
மரத்தின் மறுபிறப்பாக எழுந்து வந்தது
மரம்வளர்க்கச் சொல்லி நூறு கவிகொடுக்குது
மனிதனின் மூளைக்குள்ளே மாட்டிக்கொண்டது
தரம் தரமாய் விதவிதமாய் பிரிக்கப்பட்டது
மேல்தட்டு காகிதம் திருமணப் பத்திரிக்கையாகுது
கீழ்தட்டோ பெட்டிக்கடை சுண்ணாம்பில் வாடுது
குழந்தைகளின் கையில்பட பல வடிவமெடுக்குது
மழலைகளின் கிழிசலுக்காய் காத்துக்கெடக்குது
விழுப்புண்கள் வாங்கும் சில மேன்மையடையுது
காற்றினில் பறக்கும் சில காய்ந்துபோகுது
வர்ணம் பெறும் காகிதங்கள் ஓவியமாகுது
காகிதமே இல்லாக்காலம் விரைவில் வருகுது

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (12-May-16, 8:19 pm)
Tanglish : kaakitham
பார்வை : 945

மேலே