உயிர் பசி

ராஜா போல வாழ்க்கை..
நிமிர்ந்த நன்னடை..
குதூகலமான அணிவகுப்பு..
ஆடம்பரமான அலங்காரம்..
இதுவே போதுமென்ற சிந்தனை..
அப்படித்தான் போய்க்கொண்டிருந்தது அதுவரை..
எவனுக்கோ உயிர் பசி எடுக்க..
தனக்கு கிடைத்த உரிமையை
தவறாக பயன்படுத்திவிட்டான் என்மீது..
பணி செய்த என் மீது
அவன் அருவாளை உபயோகப்படுத்தி விட்டான்..
ஓடித்திரிந்த என் காலில் ஒன்றை
எல்லோர் முன்னும் வெட்டிப்போட்டு போய்விட்டான்..
நாலுகாலில் குதித்து திரிந்த என்னை
மூன்று கால் பிராணியாய் ஆக்கிவிட்டான்..
செயற்கைக்கால் எனக்கு ஒத்துவரவில்லை..
அதை விட இல்லாமல் போவது சரியாகப்பட்டது..
சொர்க்கமா இருந்த வாழ்க்கையை
சோகமாக ஆக்கி விட்டான்..
என்னை சொர்க்கத்துக்கே அனுப்பி விட்டான்..
இப்படிக்கு
கண்ணீருடன் சக்திமான்

#சமீபத்தில்_அரசியல்வாதியால்_ஒரு_கால்_வெட்டப்பட்டு_பின்_இறந்துபோன_சக்திமான்_குதிரைக்கு_சமர்ப்பணம்

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (12-May-16, 8:22 pm)
Tanglish : uyir pasi
பார்வை : 1734

மேலே