போலி முகங்கள்
ஒவ்வொருவருக்குள்ளும் துயில் கொண்டிருக்கும்
உரியநேரத்தில் விழித்து எழும்
எல்லோரும் அப்படியா என நினைக்கும்முன்னே
நாமும் இப்படித்தான் என நினைத்தல்நன்று
ஊருக்கு முன்னே ஒருமுகம் காட்டும்
வீட்டுக்குள்ளே ஒருமுகம் காட்டும்
உறவுக்குள்ளே ஒருமுகம் காட்டும்
நட்புக்கு முன்னே ஒருமுகம் காட்டும்
உண்மை முகத்தை காண்பது அரிது
எல்லாம் போலியாய் ஆன பின்னாலே
போலிகளுக்குள் பலர் சிக்கிச் சிக்கி
தன்முகமிழந்து அவரும் போலியானாரோ...!
உலகில் இன்று எல்லாம் போலி
கண்ணின் முன்னே நடப்பதும் போலி
காதில் கேட்கும் பலசெய்தி போலி
வாயில் பேசும் பேச்சுக்கள் போலி
இதனை விட்டு வருதல் கடினம்
மீண்டு வந்தால் கிடைக்கும் நன்மை
போலியை விட்டு உண்மைக்குள் சிக்க
வைத்திடல் தானே வாழ்க்கைக்கு நன்று