இந்த மண்ணின் மைந்தர்கள் என்ன தவறு செய்தார்கள் ஒரு இந்துக்கு பிறந்ததா ஒரு தமிழனாய் பிறந்ததா

இரவல்!!! இரவல்!!!
இலவசம்!!! இலவசம்!!!
தமிழன் தலை நிமிர மறந்தான்
மாற்றம் தேடி ஓடியவன்
உருக்குலைந்து ஓர் இடத்தில
மாறாத மாற்றத்தை எதிர்ப்பார்த்து......
திரையில் தோன்றும்
நிழலை நம்பி
ஆட்சி செய்ய அனுமதி தான்
நிஜத்தை இழந்தவன்.....
விதையாய் முளைக்கும்
தமிழனை நசுக்கும் - பொய்களை
நம்பும் வெள்ளந்தி தமிழன்......
கூனி கூனி அடிமையாய்
ஊழல் அரசியலையும்
மலர் தூவி வரவேற்கும்
மானகெட்டவர்களை ரசிக்கும்
மௌனகாரன்
கொல்லும் வெயிலில் கூட
நட்ட மரம் போல் - போலி பிரசாரங்களுக்கு
செவி சாய்க்கும் அப்பாவி
இந்த மண்ணின் மைந்தர்கள் என்ன தவறு செய்தார்கள்?
ஒரு இந்துக்கு பிறந்ததா?
ஒரு தமிழனாய் பிறந்ததா? - இல்லை
தமிழனை கேலி செய்பவன்
தமிழன் அறிவை மதிக்காதவன்
தமிழன் உழைப்பை போற்றாதவன்
இவர்கள் வழியில் செல்லும் வரை
தமிழன் தலை நிமிரமாட்டான்
தமிழனின் ஆட்சி மலராது.......
-மூ.முத்துச்செல்வி