நாற்காலியின் புலம்பல்

தவறு செய்யாத ஒருவரே என்னில் அமர ஆசை
பொய் சொல்லாத ஒருவரே என்னை ஆக்ரமிக்க ஆசை
ஊழல் செய்யாத உருவமே என்னில் உட்கார ஆசை
சாதி நினைக்காத தலைவரே என்னைத் தாலாட்ட ஆசை

எனக்குத் தெரியும் என் ஆசை எல்லாம் நிராசையே
எனக்கு நன்றாக கிடைக்கப் போகுது ஒரு பூசையே
பணமும் இலவசமும் எழுச்சி கொண்ட நேரத்திலே நான்
நேர்மையையும் எளிமையையும் எதிர்பார்ப்பது துளி கூட நியாயமில்லை

மக்களே என் ஆசை நிறைவேற்ற உங்களால் முடியும்
நீங்கள் நினைத்தால் மட்டுமே எனக்கான எதிர்காலம் நலமாய்விடியும்
தமிழகமே நல்லதொரு தலைவனின்றி தவிக்கும் வேளை இது
இந்தப் பொழுதினில் நடக்காத ஆசையெல்லாம் நான்கொண்டு என்னபயன்?

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (12-May-16, 8:34 pm)
பார்வை : 1281

மேலே