திருநங்கையின் கதறல்

செல்லில் பிரச்சனை
எங்கள் தேகம்
இப்படி மாறிவிட்டது.
இது நாங்கள்
செய்த தவறல்ல!
வேலை கிட்டவில்லை...
பேருந்தில் ஏற்றுவதில்லை....
எவரும் மதிப்பதில்லை...
யாரும் பழகுவதில்லை..
படிப்பும் கிட்டவில்லை..
நாங்களும் இவ்வுலகில்
வாழ வந்தவர்கள் தானே!
ஏன் எங்கு சென்றாலும்
மன வருத்த படுத்துகிறார்கள்!
எங்களுள் பலசாதனையாளர்கள்
இருக்கிறார்கள்...
எங்களையும்
மதியுங்கள் மனிதராக..
இது வார்த்தைகள் அல்ல!
திருநங்கையின் வாழ்க்கை!
எங்களை வாழ விடுங்கள்!
வாழ தடை போட்டு விடாதீர்கள்!
கண்ணீருடன் இருக்கிறோம்
மனதில் தினந்தோறும்...
உங்களுக்கு தெரிவதில்லை
இது...

எழுதியவர் : ப.தவச்செல்வன் (12-May-16, 9:40 pm)
பார்வை : 92

மேலே