ஒரு அழகிய குட்டி தேவதை

என் இனிய பேத்தி
ஒரு அழகிய குட்டி
தேவதை!

அவள் சிரித்தால்
தோட்டத்துப் பூக்கள் எல்லாம்
சிரித்துச் சிலிர்க்கும்!

அவள் நடந்தால்
தென்றல் கூடச் சற்று விலகி நின்று
பெருமூச்சு விடும்!

அவள் ஓடியாடி
விளையாடும் போது சிட்டுக் குருவிகளும்
நாட்டியமாடிப் பாட்டிசைக்கும்!

அவள் மழலை மொழி கேட்டு
பச்சைக்கிளியும் அங்கே வாய்பொத்தி
இச்சையுடன் நாணி நிற்கும்!

வானுலக தேவதைகளும்
அவள் அணியும் ஆடை கண்டு
பொறாமை கொள்ளும்!

ஆம்! அவள்
ஒரு அழகிய குட்டி
தேவதை!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-May-16, 10:40 pm)
பார்வை : 1464

மேலே