கண்ணியமான நட்பு
ஈர்ப்பு இயற்கையானது இருபாலினருக்கும்.
மொழியில் பேச்சில் உடையில் நடையில்
திறமையில் பண்பில் அழகில் கம்பீரத்தில்
மனம் கவரப்படுவது ஈர்ப்பு ..
ஈர்ப்பு நட்பாவதும் நட்பு காதலாவதும்
இருவர் நம்பிக்கையிலும் பார்வையிலும்.
ஈர்ப்புக்கு கண்ணியமான உடை
உடுத்திப் பார்த்தால் அது நல்ல நட்பு.
கச்சையைக் கட்டிப் பார்த்தால் அது காமம்.
ஆண், பெண் நட்பு அழகானது அது அழுக்காகாத வரை..
ஆரோக்கியமானது அது வலுவிளக்காத வரை..
அபூர்வமானது அதை அசிங்கப்படுத்தாத வரை ..
அமைதியானது சலனமில்லாமல் தொடரும் வரை ..
வலிமையானது அது தடுமாறாத வரை..
பாதுகாப்பானது பங்கம் விளைவிக்காத வரை..
உணர்ச்சி மிக்கது உள்ளங்களில் புரிதல் உள்ள வரை..
கெளரவமானது கண்ணியம் தவறாத வரை ..
பிரமிக்கத் தக்கது பார்ப்பவர்களால் பாராட்டப்படும் வரை..
கொண்டாடாடுதற்குரியது தன் கொள்கை மாறாத வரை..
புனிதமானது தன் உயிரையும் கொடுக்க துணியும் வரை!!

