இடியிடித்து உன்னை மிரட்டும்போது
வாழ்க்கைப் புயலில்
கப்பலே கவிழ்ந்தாலும்
கலங்காதிரு மனமே - உன்னை
கடவுள் கைவிட மாட்டார்!
சூறைக்காற்று உன்னைத்
தூக்கித் தூர வீசினாலும்
துவளாமல் உறுதியாக - சிறு
துரும்பையாகிலும் பிடித்துக் கொள்!
கொட்டும் மழை நாலு பக்கம்
தாக்கினாலும் தளராமல்
எதிர் நின்று ஒதுங்கிச் - சென்று
உன்னைக் காத்துக் கொள்!
இடியிடித்து உன்னை மிரட்டும்போது
பேடியாக மாறி பயங்கொள்ளாதே,
பக்குவமாய் நீ நடந்து - நல்ல
புகலிடத்தைப் பார்த்துக் கொள்!
மின்னல் உன்னை நெருங்கும் போது
கிடைக்கும் ஒளியைப் பயன்படுத்தி
கச்சிதமாய்ப் பத்திரமாய் - காரிருளை
விட்டு விலகிக் கொள்!