கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்
கோடிகள் பதுங்கியிருக்கும்
இடங்களை
காற்றாலும் கண்டுபிடிக்க முடியாது.
எத்தனை பேர் ஏப்பம்விட அப்படியே
விழுங்கிவிட்டார்களோ?
அற்ப ஆயிரங்களும் லட்சங்களும்
அவ்வப்போது எங்காவது மாட்டிக்கொள்ளும்
ஆதாரம் கிடைத்தால் சேதாரமின்றி
சேருமிடம் சேர்ந்துவிடும்.