கலிகாலம்

இன்னமும் இப்படியாக இவர்கள் :

இன்னமும் வகுடெடுத்து தலைசீவி கோபுர மஞ்சள் பூசி கோகுல் சாண்டல் இட்ட அக்காக்கள் இருக்கவே செய்கிறார்கள்...

இன்னமும் எட்டு புள்ளி கோலங்களை சிலபொழுது நான் கடக்கவே செய்கிறேன்..

இன்னமும் கடைதெரு ஒன்றில் பல்லாங்குழிகள் விற்பதை கண்டு பரவசமடைகிறேன்...

இன்னமும் குரங்கு பெடளிட்டு சிறார்கள் சைக்கிள் கற்றுகொள்ளவே செய்கிறார்கள்...

இன்னமும் குட்டிகூறா வாசம் எங்கேனும் காற்றில் கலந்தபடியேதான் இருக்கின்றது...

இன்னமும் இளையராஜாவுக்கு எத்தனையோ பேர் இரையாகி கொண்டுதான் இருக்கிறார்கள்...

இன்னமும் புலிமார்க் சீயக்காய், ரெய்நோல்ட்ஸ் பேனா, நடராஜ் பென்சில் விற்கவே செய்கின்றன...

இன்னமும் கோடை விடுமுறையில் அக்கா வீடுகளும் மாமா வீடுகளும் பிள்ளைகளால் நிரம்பவே செய்கின்றன ..

இன்னமும் இவைகள் என்னவென்று அறியாமலும் புரியாமலும் அப்பார்ட்மெண்ட் ஆண்டிகளுக்கும் அங்கிள்களுக்கும் பிறந்த சில மொட்டுக்கள் பூக்காமலேயே வாடிக்கொண்டு இருக்கத்தான் செய்கிறார்கள்...

எழுதியவர் : காவி.. (16-May-16, 4:24 am)
பார்வை : 150

மேலே