யானைப் பாகன்
முத்தையா எனும் யானைப் பாகன் ஒருவன் நல்லம்மா எனும் ஊரில் வாழ்ந்து வந்தான்
அவன் யானைக் குட்டி ஒன்றை பல வருடங்களாக எடுத்து வளர்த்து வந்தான் ,
திடீரென்று அந்த யானைக்குடிக்கு பெரும் வயிற்று வலி ,என்னென்னமோ செய்து பார்த்தும் அந்த யானைக்கு வயிற்று வலி தீரவேயில்லை
கடைசியாக கால்நடை வைத்தியன் ஒருவனை அழைத்து வந்து பார்த்தான் ,
வைத்தியன் யானையை சோதித்து விட்டு ,உங்கள் யானையை பெரும் நோய் ஒன்று தாக்கியுள்ளது ,இந்த நோயை தீர்க்க வழியே இல்லை
உங்கள் யானை இன்னும் ஓரிரு மாதத்தில் இறந்து விடும் என்று கூறி வைத்தியம் பார்த்ததற்க்கு கூலியை வாங்கி விட்டு வைத்தியன் சென்று விட்டான்
இந்த யானையை நம்பித் தான் நான் பலரிடமும் கடன் பெற்றேன் ,இது செத்து விட்டால் நான் சாப்பாட்டுக்கு என்ன செய்வேன் என்று அழுது புழம்பினான் முத்தையா
அப்போது தான் யானைப்பாகன் முத்தையாவிற்க்கு நியாபகம் வந்தது ,கந்தன் எனும் ஒருவன் சென்ற வாரம் தனது யானையை பாதி விலைக்கு கேட்டிருந்தது,
அப்போது விலை குறைவாக கேட்டதால் முத்தையா தனது யானையை விற்க மறுத்து விட்டான் ,
இனி இந்த யானையை வைத்து எந்த பிரியோஜனமும் இல்லை , இந்த யானையை இனி கந்தன் தலையிலேயே கட்டி விட வேண்டியது தான் என முடிவு செய்தான்
பிறகு முத்தையா கந்தனுக்கு யானையை பாதி விலைக்கே கொடுத்து விட்டான்
ஆனால் ,உண்மையில் ,அந்த யானைக்கு வைத்தியம் பார்த்தவன் கந்தனின் கூட்டாளி,உண்மையில் அந்த யானைக்கு சாதாரன வயிற்று வழியே ,அந்த யானையை பாதி விலைக்கு வாங்கவே அந்த கந்தனும் வைத்தியனும் இப்படியொரு நாடகத்தை நடத்தினர்,
யானையை பெற்றுக் கொண்ட கந்தனும் வைத்தியனும் அந்த யானையை அடுத்த நாள் அதீத விலைக்கு விற்க ஏற்பாட செய்திருந்தனர்
அடுத்த நாள் வந்தது ,கந்தனும் வைத்தியனும் கேட்ட அதீத விலைக்கு அந்த யானையை வாங்க ஒருவன் வந்திருந்தான் ,வந்தவன் யானையை வாங்க முடிவு செய்து விட்டான்
கந்தனுக்கும் வைத்தியனுக்கும் ஒரே சந்தோசம் பணம் கிடைக்கப் போகிறது என்று,
நேற்றிரவு அந்த யானை என்னத்தை திண்றுதொலைத்ததோ
யானை தொப்பென்று கீழே விழ அப்படியே செத்துப்போனது
யானையை வாங்க வந்தவன் யானையை வாங்க மறுத்து விட்டு சென்று விட்டான்
கடைசியில் கந்தனுக்கும் வைத்தியனுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது ,
பிறகு இருவரும் தாங்கள் செய்த தவறை எண்ணி வருத்தம் கொண்டனர்
-விக்னேஷ்