இராமானுஜன் சாரோட காதல்
நீ என்னருகில் இருந்திருந்தால்
நோயே எனை அண்டியிருக்காது ஜானு
நீ இல்லாமல் நான் மட்டும் தனியே
தாங்கமுடியவில்லை
தண்டவாளத்தில் தலை வைத்து விட்டேன்
ஆனால் உயிர் போகவில்லை
உனை பார்ப்பதற்காகவே
எனை இன்னும்
நாமகிரி தாயார்
உயிரோடு உலவ விடுகிறாள்
என்று நினைக்கிறேன்
உலகமே என்னை தூற்றுகிறது
போற்றுகிறது
ஆனால் நீ மட்டும் உடன் இல்லையே
எனை பற்றி பேசவில்லையே
என்ற கவலையிலேயே
ஒரு வேளை உண்பதை கூட தவிக்கிறேன்.
கணிதத்தில் இறங்கிவிட்டாள்
இரவு பகல் பாராது
அதிலேயே மூழ்கிடுவேன்
மூன்று நாட்கள் கழித்து உண்ட நியாபகம்
உலக போர் இங்கு என்கிறார்கள்
உண்மையான உலகபோர் எனக்குள்ளே நடக்கிறது நாளும்
கணிதம் தான் என் வாழ்க்கை
என்றிருந்தேன்
நீ வந்து அதில்
இடம்பிடித்தாய்
நான் இருக்க வேண்டிய
மனதில்
முழுவதும்
ஆக்கிரமித்துகிடக்கும்
கணிதத்தை விரட்டியடிப்பேன்
என்று கூறிய அவளே
என் பெயருக்கும் புகழுக்கும் காரணம்
கணிதம் என்று தெரிந்ததும்
அதை என் உயிருக்கு நிகராய் ஏற்றுகொண்டாள்
எதுவும் அறியா
என்னை மட்டும் அறிந்த
என்னவள்
அவள் சிறியவள் என்று
யார் சொன்னது
அன்பில் மிகப்பெரியவள் அவள்
ஆலோசனைகளும் தந்திடுவாள்
ஆரோக்கியத்தையும் பேணிகாத்திடுவாள்
என் ஜானு
அவள் எனை வழியனுப்ப வந்தாள்
வழிதுணையாக வரவில்லை என்று வருத்தப்பட்டேன்
ஆனால் தாயின்
பாசத்தின் (என்னருகில் என்னவள் இருந்தாள் எனக்கு சொற்ப ஆயுள்.
32 வயதை அடையும் முன்னே மண்ணை அடைவேன்)மறைப்பால்
நடந்தது இவ்விளைவு
என்று பின் தான்
அறிந்துகொண்டோம் இருவரும்
உடல்நிலை சரியில்லாமல்
கடல் கடந்து
லண்டனில் இருந்து
மதராசபட்டிணம் வரும் வேளை கூட
அவள்
எனை வரவேற்க வரவில்லை
ஊரே வந்திருந்தது
வரவேற்க
அதில் எனக்கு
நாட்டம் செல்லவில்லை
அவள் இன்றி
என் அன்னையின்
கடிதம்
அவள் கை கிடைத்ததும்
அடித்து பிடித்து
ஓடிவந்தாள்
வந்தவள்
என்னருகில் ஓடிவந்தாள்
என் ஜானுவை பார்த்த நான்
உடனே எழுந்து உட்கார
அவள் எனை அணைத்துகொண்டு
அழுக ஆரம்பித்துவிட்டாள்
பின் அவளே தன்னை
தைரியபடுத்திக்
கொண்டு
என்னுடன் எப்பொழுதும் போல் பேச ஆரம்பித்தாள்
வலிகளை மறைக்க செய்தாள்
உடனே நெஞ்சு வலி வந்துவிட
வெது வெதுப்பாக தடவி விடுவாள்
நான் சாவின் படுக்கையில்
இருக்கையிலும்
கணித ஆராய்ச்சி
செய்தேன்
அவள் என்னருகில் என்னையே பார்த்துக்
கொண்டிருந்தாள்
லண்டனில்
எனை பலரும்
பைத்தியம் என்றார்கள்
ஜானு
பூ ,செடி, கொடிகளுடன்
எல்லாம் பேசுகிறேன் என்று
ஆனால் அவர்களுக்கு தெரியாது அவையெல்லாம்
என் ஜானு என்று
அம்மா எனக்கு
சொற்ப ஆயுள் விதிக்கப்பட்டிருக்கிறது என்பதை நான் அறிந்துகொண்டேன்
என்னை மன்னித்திடுங்கள் அம்மா
என்னையும் ஜானகியையும் பிரிக்க
நினைக்கிறீர்கள் என்று
நானும் ஜானுவும் தவறாக புரிந்துகொண்டதற்கு
ஜானு நான் உன் கூட
நெறையா நாள் வாழ ஆசை கொண்டேன்
ஆனால் அது முடியாத காரியம்
என் கணித நோட்டுகளை
என் கல்லூரியின் முதல்வர்களிடம்
ஒப்படைத்துவிடு
உன் மடியை கொடு
கையை பிடி
~ பிரபாவதி வீரமுத்து