என்னடா வாழ்க்கை இது

உட்கார்ந் திருந்தே உழைக்கா பலபேரும்
வெட்கமின்றி உண்பார் விருந்துணவு. – வெட்டுகின்ற
மின்னலிடி யோடு மழைதாங்கி போராடி
அன்றாடம் அல்லலுறும் ஏழை அவன்குழந்தை
என்றென்றும் பட்டினி என்றிருக்கச் செய்தவனே
என்னடா வாழ்க்கை இது?
*மெய்யன் நடராஜ்