மாற்றங்கள் தான் உலகம்

கோழி கூவி எழுந்த காலம் போய்
பசுவின் பாலை அருத்திய நேரம் போய்
கீரையும், பருப்பும், அரிசியும் உண்ட
நாட்கள் போய்.
கோவிலும், கட்டுப்பாடுமாக வாழ்ந்த
வேளை போய்: முடிந்த காலம்.

இன்று செல்போன் சிணுங்க எழும் பழக்கம்
பாக்கெட் பாலை குடிக்கும் வழக்கம்
பீசாவும்,பர்கரும் உண்டு: மகிழும் அழகு
திரைப்படமும், தொலைகாட்சியும்
கண்டு கழித்து களிப்புற : தற்காலம் .

நாளை எப்படி மாறுமோ என்று சிந்திக்கையில்
மாற்றங்கள் தான் உலகம் என்று எண்ணி
யாவற்றிலும் நல்லது இருக்க அதைப் பற்றி
கொண்டு வாழ்தலே சிறப்பு .

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (21-May-16, 8:03 pm)
பார்வை : 569

மேலே