நான் ஒரு பிறவிக் கலைஞன்

நான் ஒரு
பிறவிக் கலைஞன்.
ஜெனிக்கப்பட்ட போதே
வெற்றியை
மணம் முடித்தவன்.

என் தோளில்
புஜ நடுக்கத்தில்
சமுத்திரமே கலங்கிடும்.

விண்ணுக்கும் முகிலுக்கும்
தூது விட்டுக் கொண்டிருக்கும்
மாந்தர் மத்தியில்
விண்ணை வில்லாக
முகிலை முதுகாக
உருமாற்றிக் கொண்டவன்.

என் அகக் கூட்டினில்
காக்கையும் பேசும்.
மயிலும் நடிக்கும்
மானும் பாடும்.

விலை மாதர்
முதல்
விடலைச் சிட்டு வரை
என் தோட்டத்தில்
பூப் பறித்து மகிழ்வர்.

நான்
மரணத்தைத் தேடி
பாய் விரித்த
நோயாளி அல்ல.

நான்
இறைவனின்
அதிசயப்படைப்பு.

என்
இல்லத்தில்
வல்லூறுகளின் வட்டமிடும்
ஓசையும்
மானிட நாரையின்
எச்சமும்
விழுவதில்லை.

நான்
சுட்டிக்காட்டும்
திசைதான்
வேதம்.


நான்
கட்டி எழுப்பும் கோட்டைதான்
மதம்.

புகழ் மழையின்
தூறலில்
நனையும் நான்
மாண்டு போவதில்லை.

என்
சிந்தை
உலகத்தையே
ஆட்டி வைக்கும்.

என்னை
தூற்றியவர்
வாழ்ந்திட முடியாது.

இறைவனுக்கே
காற்றின் அசைவில்
உயிர் இருப்பதை
உணர்த்தியவன்.

மனிதன்
எனக்கு எம்மாத்திரம்?

நாஞ்சில் இன்பா
9566274503

எழுதியவர் : நாஞ்சில் இன்பா (21-May-16, 9:16 pm)
பார்வை : 88

மேலே